×

சென்னை குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி மோசடி: மேலும் ஒருவர் கைது

சென்னை: அயப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி 75 பேரிடம் சுமார் ரூ.9 கோடி வரை பண மோசடியில் ஈடுப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சென்னை மண்ணடியில் வசிக்கும் முனியசாமி என்பவரிடம், அவருக்கு தெரிந்த சரோஜா மற்றும் ஆறுமுகம், வெங்கடேசன், ஜெகதீஷ் ஆகிய கூட்டாளிகள்  சென்னை அய்யப்பாக்கத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய முனியசாமி தனக்கு மூன்று குடியிருப்புகள் வாங்கி தருமாறு கூறி, குடியிருப்புக்கு தலா ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம்  கொடுத்துள்ளார். தொடர்ந்து முனியசாமியிடம் 3 குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி போலி ஆவணங்களை சரோஜா வழங்கி உள்ளார். ஆவணங்கள் அனைத்தும் போலி என தெரியவந்ததை தொடர்ந்து சரோஜா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  மோசடியில் ஈடுபட்ட சரோஜா, ஆறுமுகம் வெங்கடேசன் ஆகிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இதேபோல சரோஜா மற்றும் கூட்டாளிகள் பலரிடம் ரூ.9 கோடி வரை மோசடியில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய ஜெகதீசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

The post சென்னை குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி மோசடி: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Slum Replacement Board ,Chennai ,Ayappakkam Slum Replacement Board ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...